ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சற்று முன்னர் தீவிரவாதிகளால் பாரிய ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்லாமிய பெருநாளை முன்னிட்டு ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தொலைக்காட்சியின் நேரலையில் யுத்த நிறுத்தம் தொடர்பாக உரையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே ஏவுகணைகள் வெடித்து சிதறியுள்ளன.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பகுதி புகைமண்டலத்தால் சூழப்பட்டுள்ளதால் சேத விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

குறித்த பகுதியை சுற்றி பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.