கீத் நொயார் எனும் ஊட­க­வி­ய­லா­ளரை விஷே­ட­மாக தனக்கு ஞாபகம் இல்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரி­வுக்கு வாக்குமூலம் அளித்­துள்ளார். 

அத்­துடன் கீத் நொயார் கடத்­தப்­பட்ட தினம் இரவு, சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் இருந்து தனக்குத் தொலை­பேசி அழைப்பு வந்­ததா எனவும் தனக்கு ஞாபகம் இல்லை எனவும், அவ்­வாறு வந்­தி­ருப்பின் அவ்­வ­ழைப்பு தொடர்பில் தேடிப் பார்க்க ஜனா­தி­ப­தியின் செயலர் அல்­லது பாது­காப்பு செய­ல­ருக்கு தான் அறி­வித்­தி­ருப்பேன் எனவும் மஹிந்த ராஜ­பக்ஷ சி.ஐ.டி.யிடம் தெரி­வித்­த­தாக அரச சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நேற்று கல்­கிசை நீதிவான் லோச்­சனா அபே­விக்­ர­ம­வுக்குத்  தெரி­வித்தார். அவ­ரது வாக்குமூலத்தின் சாராம்சம் 'தனக்கு ஞாப­க­மில்லை' என்பதாகும் எனவும் அவர் நீதி­வா­னுக்கு தெரி­வித்தார்.

இந் நிலையில் இந்த விவ­கா­ரத்தில் அடிப்­படை சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் ஞாபக மறதி நோய் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்டும் என சி.ஐ.டி.க்கு  உத்­தரவிட்ட நீதிவான் லோச்­சனா அபே­விக்­ரம, விசா­ர­ணை­களில் அவர்கள் விட­யங்­களை மறைப்­பார்­களாயின் அதன் பின்­னணி தொடர்பில் ஆரா­யப்­படல் வேண்டும் எனவும் அவர்  சி.ஐ.டி.க்கு ஆலோ­சனை வழ­ங்­கினார்.

த நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்பட்­டமை, சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை, ஆயு­தத்தால் தாக்­கப்பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப்பட்­டமை மற்றும் நொயார் குடும்­பத்­தி­ன­ருக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்ட சம்­பவம்  தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் குறித்த நீதிவான் நீதி­மன்ற வழக்கு நேற்று கல்­கிசை மேல­திக நீதிவான் லோச்­சனா அபே­விக்­கிரம முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இந்த வழக்­கா­னது நேற்று விசா­ர­ணைக்கு வந்த போது குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சார்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பீ.எஸ்.திசேரா,  சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா  ஆகியோர் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் மன்றில் ஆஜ­ரான நிலையில் அவர் சார்பில் அரச சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம பிர­சன்­ன­மானார்.

இதன்­போது ஏற்­க­னவே இந்த விவ­கா­ரத்தில் கைதாகி  பிணையிலுள்ள இரா­ணு­வத்தின் புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டபிள்யூ.புளத்­வத்த, எஸ்.ஏ.ஹேமச்­சந்­திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விம­ல­வீர, எச்.எம். நிசாந்த ஜய­தி­லக, எம்.ஆர். நிசாந்த குமார, சி.ஜய­சூ­ரிய ஆகி­யோ­ருக்கு மன்றில் ஆஜ­ராக வேறு திகதி கொடுக்­கப்பட்­டுள்­ளதால் அவர்கள் ஆஜ­ரா­க­வில்லை. எனினும் 8 ஆவது சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ புல­னா­ய்வுப் பிரிவின் முன்னாள் பிர­தா­னியும் முன்னாள் இரா­ணுவ படைப் பிரி­வு­களின் பிர­தா­னி­யு­மான முன்னாள் பதில் இரா­ணுவத் தள­பதி அமல் கரு­ணா­சே­கர விளக்­க­ம­றி­யலில் உள்ள நிலையில் அவர் நேற்று மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார். 

இந் நிலையில் மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்றில் சமர்­ப்பித்து தெளிவுபடுத்­திய அரச சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மினி கிரி­யா­கம, "கனம் நீதிவான் அவர்­களே, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­விடம் முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களின் போது, அவர் தனக்கு ஞாபகம் இல்லை என்ற நிலைப்­பாட்­டி­லேயே இருந்தார். கீத் நொயார் எனும் ஊட­க­வி­ய­லா­ளரை விஷே­ட­மாக தனக்கு ஞாபகம் இல்லை எனவும் அக்­கா­லத்தில் ஊட­கங்­களில் அர­சாங்­கத்­தையும், படை­யி­ன­ரையும் விமர்­சித்து பல்­வேறு செய்­திகள், அறிக்­கைகள் வெளி­வந்­த­தா­கவும் சி.ஐ.டி.யினரின் கேள்­விக்குப் பதி­ல­ளிக்கும் வண்ணம் அவர் கூறியுள்ளார்.

எனினும் கீத் நொயார் கடத்­தப்பட்ட தினம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் இருந்து தொலை­பேசி அழைப்பு வந்­த­தாக ஞாபகம் இல்லை எனவும் அவ்­வாறு வந்­தி­ருந்தால்  அது குறித்து தேடிப் பார்க்க ஜனாதிப­தியின் செய­லா­ள­ருக்கோ அல்­லது பாது­காப்பு செய­ல­ருக்கோ பாரப்­ப­டுத்­தி­யி­ருப்பேன் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

சபா­நா­ய­க­ரிடம் இருந்து வந்த அழைப்பை மஹிந்த ராஜ­பக் ஷ மறுக்­க­வில்லை. மறை­மு­க­மாக அதனை ஏற்­றுக்­கொன்டு அது தொடர்பில் தேடிப்­பார்க்க முன்னாள் பாது­காப்பு செய­ல­ருக்கு உத்­தரவிட்­டமை தொடர்­பிலும் மறை மு­க­மாக அவர் ஏற்­றுக்­கொள்­கின்றார்" என்றார்.

இதன்­போதே இந் நிலையில் இந்த விவ­கா­ரத்தில் அடிப்­படை சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் ஞாபக மறதி நோய் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்­டும். இது சிக்­க­லா­னது என நீதிவான் லோச்­சனா அபே­விக்­ரம கூறவே,  சாட்­சி­யா­ளர்கள் ஞாப­க­மில்லை எனக் கூறுவதால் விசா­ர­ணை­களே பாதிக்­க­ப்­படு­வ­தாக அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில் தொடர்ந்தும் மன்றில் கருத்­து­களை முன்­வைத்த சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி கிரி­யா­கம, கீத் நொயா­ரிடம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்து சி.ஐ.டி. பதிவு செய்த வாக்குமூலத்தில் உள்ள விட­யங்­களை வெளி­ப்ப­டுத்­தினார். குறித்த வாக்குமூலத்தில், தான் கடத்­தப்­பட முன்­னைய தினம் சென்­பத்தி எனும் பெயரில் பிர­சு­ரித்த கொழும்பு லோட்டஸ் வீதி தற்­கொலை குண்டுத் தாக்கு­தலை மையப்­ப­டுத்­திய இராணு­வத்தின் இய­லா­மையை சுட்­டிக்­காட்டிய கட்­டு­ரையே தாக்கு­த­லுக்குக் கார­ண­மாக கரு­து­வ­தாகக் கூறி­யுள்ளார்.

இத­னை­விட  தன்னைக் கடத்திச் சென்ற­வர்கள் வேனில் வைத்து, தனக்கும் புலி­க­ளுக்கும் இடையில் தொடர்பு உள்­ளதா, இரா­ணு­வத்தில் இருந்து தகவல் தருவோர் யார், வங்கிக் கணக்கு இலக்கம், மனைவி மற்றும் பிள்­ளைகள் குறித்த விப­ரங்­களை மைய­ப்ப­டுத்­தியே கேள்வி கேட்­ட­தாக கீத் நொயார் கூறியுள்­ள­தாக லக்­மினி ஹிரி­யா­கம நீதி­வா­னுக்கு சுட்­டிக்­காட்­டினார்.

இந்நிலையில் ஏற்­கெனவே கீத் நொயார் தடுத்து வைக்­கப்பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் தொம்பே பது­வத்தை வீடு குறித்த தக­வல்­களை வெளி­ப்ப­டுத்த பாது­கா­ப்பு செய­ல­ருக்கு அனுப்பப்­பட்ட 2 கேள்விக் கொத்­துக்­க­ளுக்கும் இன்னும் பதிலில்லை என சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி நீதிவானுக்கு சுட்டிக்காட்டினார். இதனையடுத்து அது குறித்து ஞாபகப்படுத்தல் கடிதம் ஒன்றினை பாதுகாப்புச் செயலருக்கு அனுப்புமாறு நீதிவான் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் இராணு­வத்தின் செலவு தொடர்பில் கணக்காய்வாளருக்கும் கேள்விக் கொத்தொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் பதிலையும் எதிர்பார்த்துள்ளதாக அரச சட்டவாதி லக்மினி முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிவான்,  வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து, அதுவரை 8ஆம் சந்தேக நபரான அமல் கருணாசேகரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.