(க.கிஷாந்தன்)

கொத்மலை பூண்டுலோயா நகரத்தில் நேற்று இரவு 7.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடை ஒன்றின் ஒரு பகுதி முற்றாக எரிந்துள்ளதுடன் அருகில் இருந்த கடைகளுக்கும்   சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

 குறித்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாயு சிலிண்டர் வெடித்து சிதறியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 விற்பனை நிலையத்தின் மூன்றாம் மாடியிலேயே தீ பரவியுள்ளதுடன், தீயினால் அந்த மாடியிலிருந்த தளபாடங்கள் அனைத்தும் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சுமார் மூன்று இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தளபாடங்கள் தீயினால் அழிவடைந்துள்ளன.

 தீ ஏற்பட்ட நேரத்தில் பொதுமக்கள், பொலிஸார் உதவியுடன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நுவரெலியா மாநகர சபை தீயணைக்கும் பிரிவு தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததும் ஸ்தலத்திற்கு வருகை தந்தனர்.

 தீ ஏற்பட்டதற்கான சரியான காரணம்  குறித்து பூண்டுலோயா பொலிஸார் விசாரணைகளை மேற்க் கொண்டு வருகின்றனர். அதற்கு இயற்கை அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் பூரண ஒத்துத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.