முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரம் பகுதியில் முல்லை  பால் பதனிடும் தொழிற்சாலை    ஆரம்பிக்கப்பட்டு பலருக்கு தொழில் வாய்ப்பை வழங்கியுள்ளது.  

முல்லைத்தீவில் உள்ள  கிராமங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து குளிரூட்டுதல், பதப்படுத்துதல் மற்றும் தரம் வாரியாக வகைப்படுத்தி நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுகிறது. 

அதில் எஞ்சிய கொழுப்பு, நெய், வெண்ணை அல்லது பால் கட்டிகளாக கடைகளுக்கு விற்கப்படுகிறது.

 குறித்த தொழிற்சாலையின் உற்பத்திகளா அடைக்கப்பட்ட  பால், தயிர் ,நெய் ,பால்  ரொபி,  என்பன தயாரித்து விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

 

முல்லை பால் பதனிடும் தொழிற்சாலை   கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி வேலைக்காக ஓடிக் கொண்டிருபோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது மட்டுமல்லாது கணவனை இழந்த பெண்கள் ,மாற்றுத்திறனாளிகள் எனப் பலருக்கு தொழில்வாய்ப்பினை வழங்கியுள்ளது. 

இதன் மூலம் மாடுவளர்போருக்கு நிரந்தரமாக தொடர்ந்து குறித்த தொழிற்சாலைக்கு பாலினை விநியோகம் செய்யமுடியும். 

புலம்பெயர் தேசத்தில் வசித்து வரும்  தவசீலன்  என்பவரால் இயக்கப்பட்டு வரும் குறித்த முல்லை பால் தொழிற்சாலை தொடர்பில் உங்கள் நோக்கம் என்ன என  அவரிடம் கேள்வி  எழுப்பிய போது,

எனக்கு இத் தொழிற்சாலையின் வருமானகளை புலம்பெயர் தேசத்திக்கு எடுத்துச் செல்லப் போவதில்லை இதனை மீள மீள இங்கு முதலிட்டு பலருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு மாடுவளர்ப்பினையும் ஊக்குவிக்கலாம்.

 இதனால் எமது மாவட்டங்கள் எமது மாகாணங்களுக்கான பொருளாதரத்தை நாமே நிர்ணயிக்கலாம் எனது தொழிற்சாலை மட்டும் தான் இவ்வாறு செய்யலாம் என்பது அல்ல எனது நோக்கம் புலம்பெயர் தேசத்தில் உள்ள பலர் இவாறான தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் பலருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார் 

மிகவும் நவீன முறையில் சுத்தமான முறையிலும் சுகாதாரமான முறையிலும் அமைக்கப்பட்டுள்ள குறித்த தொழிற்சாலையிலிருந்து வரும் தயாரிப்புக்கள் இப்பொழுது உள்ளூர் சந்தைகளில் இடம்பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தகது.