"ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க மாட்டேன். இங்குள்ள பிரச்சினை சம்பள அதிகரிப்பல்ல. அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு முறைமையொன்றை தயாரிக்க ஆணைக்குழுவொன்றை நிறுவவுள்ளோம் என நிதியமைச்சரும் ஊடக அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஒரு தரப்புக்கு சம்பளம் அதிகரித்தால் ஏனையோருக்கு சம்பள அதிகரிப்பு செய்ய வேண்டும். அது சிக்கலான காரியமாகும். இதன் காரணமாகதான் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு முறைமையொன்றை தயாரிக்க ஆணைக்குழுவொன்றை நிறுவவுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த ஆணைக்குழுவுக்கான நபர்களை ஜனாதிபதி பெயரிட்டதும் 2 மாதங்களில் புதிய சம்பள முறைமையை தயாரிப்போம். 

சர்வாதிகார முறைமையில் அன்றி ஜனநாயக முறைமையிலேயே குறித்த பிரச்சினையை தீர்க்க முடியும்.

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்க போவதாக கூறுகின்றனர். உங்களது தீர்மானத்தை மாற்றியுள்ளீர்களா? சம்பளம் அதிகரிக்கப்படுமா? என்று ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.