முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகி­யோ­ருக்கு மீண்டும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும்  என்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன உரு­வாக்­கிய ஜனா­தி­பதி பத­வியை வகித்­த­வர்­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழ்­வரும் “இரு தட­வைகள் பதவி வகித்­த­வர்கள் மீண்டும் ஜனா­தி­பதி பதி­விக்கு நிய­மிக்க முடி­யாது” என்ற ஏற்­பாடு ஏற்­பு­டை­ய­தாக அமையப் போவ­தில்லை. 

எனவே முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகி­யோ­ருக்கு மீண்டும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும்.

எனவே அது குறித்த நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேற்­கொள்­ள­வுள்ளோம். அர­சி­ய­ல­மைப்பின் 19 அவது திருத்தச் சட்­டத்தின் கீழ் புதிய ஜனா­தி­பதி பதவி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. 

எனவே முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்த்­தன உரு­வாக்­கிய ஜனா­தி­பதி பத­வியும், அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழ் உரு­வாக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி பதி­வியும் வெவ்­வே­றா­ன­வை­க­ளாகும்.

இரண்டு தட­வைகள் ஜனா­தி­ப­தி­க­ளாக பதவி வகித்­த­வர்கள் இருவர் உள்­ளனர். முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மற்றும் மஹிந்த ராஜ­பக்ஷ ஆகி­யோர்­க­ளே­யாவர். அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழ் அவ்­வி­ரு­வ­ருக்கும் மீண்டும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு  சட்டச் சிக்கல் ஏதும் இல்லை என நாம் எதிர்­பார்க்­கிறோம்.

ஏனெனில் ஜனா­தி­பதிப் பதவி அர­சி­ய­ல­மைப்பின் 30 ஆவது சரத்தின் கீழ் அமைக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன அமைத்த குறித்த அர­சி­ய­ல­மைப்பில் தெளி­வான சரத்­தொன்­றுள்­ளது.  அதா­வது “ஜனா­தி­பதிப் பத­வியை உறு­திப்­ப­டுத்தும்” சரத்­தென அது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  அர­சி­ல­ய­ல­மைப்பின் 19 அவது திருத்தச் சட்­டத்தின் மூலம் அந்த சரத்து நீக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அந்த சரத்தில் திருத்தம் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. மாறாக அது நீக்­கப்­பட்­டுள்­ளது. 

எனவே அதன் பின்னர் புதிய ஜனா­தி­பதிப் பத­வி­யொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. 19 திருத்­தத்தின் 8 ஆவது பிரிவின் கீழ் ஜனா­தி­பதிப் பத­வியின் அதி­கா­ரங்கள் பாரி­ய­ளவில் நீக்­கப்­பட்­டுள்­ளன. முன்னாள் ஜனா­தி­பதி ஜே. ஆர். ஜய­வர்­தன அமைத்த ஜனா­தி­பதிப் பத­விக்கும் 19 திருத்­தத்தின் கீழ் அமைக்­கப்­பட்ட ஜனா­தி­பதிப் பத­விக்­கு­மி­டையில் பாரிய வேறு­பாடு உள்­ளது. 

முன்னாள் ஜனா­தி­பதி முறை­மையின் கீழ் அமைச்­ச­ரவை  அமைச்­சர்­களை நிய­மிக்கும் பூரண அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இருந்­தது. அது மாத்­தி­ர­மல்­லாது அமைச்­சர்­க­ளையும் நீக்க முடியும். அதில் பிர­த­மரின் பொறுப்போ அதி­கா­ரமோ இல்லை. பிர­த­மரின் அபிப்­பி­ராயம் பெற வேண்­டுமா இல்­லையா என்­பது குறித்து ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும்.

எனினும் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் எட்­டா­வது பிரிவின் கீழ் அமையும் ஜனா­தி­ப­தி­யினால் அவ்­வி­ரண்டு காரி­யங்­க­ளையும் மேற்­கொள்ள முடி­யாது. ஜனா­தி­பதி பிர­த­மரின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே அமைச்­சர்­களை நிய­மிக்க வேண்டும். பிர­த­மரின் ஆலோ­சனை பெறாது அவ்­வி­ட­யத்தில் தீர்­மானம் மேற்­கொள்ள முடி­யாது.  அமைச்­சர்­களை நீக்­கு­வ­தா­யினும் பிர­த­மரின் ஆலோ­ச­னையின் கீழே அதனைச் செய்ய வேண்டும்.

மேலும் முன்­னைய ஜனா­தி­பதி முறை­மையின் கீழ் பாரா­ளு­மன்­றத்தை ஒரு வருட காலத்தின் பின்னர் கலைக்கும் அதி­காரம் இருந்­தது. எனினும் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தின மூலம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஜன­ப­தி­பதி முறை­மையின் கீழ் அதனைச் செய்ய முடி­யாது. நான்­கரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தாயின் பாரா­ளு­மன்றின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் பிரே­ரணை ஒன்று நிறை­வேற்­றப்­பட வேண்டும். அத்­துடன் முன்­னைய ஜனா­தி­பதி முறை­மையின் பிர­காரம் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக பதவிக் காலத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடி­யாது.

ஆகவே இவ்­வா­றா­ன­வற்றை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு நோக்­கும்­போது 19 அவது திருத்தச் சட்­டத்­தின்கீழ் புதிய ஜனா­தி­பதி பதவி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.  முன்னாள் ஜனா­தி­பதி ஜே. ஆர். ஜய­வர்தன் உரு­வாக்­கிய ஜனா­தி­பதி பத­விக்கும், அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவ­து­தி­ருத்தச் சட்­டத்தின் கீழ் உரு­வாக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி பத­விக்­கு­மி­டையில் வேறு­பாடு உள்­ளது. ஆகவே அவ்­விரு பத­வி­களும் வேறு­பட்­ட­வை­யாகும்.  

எனவே 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் கீழ், குறித்த பத­வியை இரு தட­வைகள் வகித்­த­வர்கள் மீண்டும் அப்­ப­த­விக்கு நிய­மிக்­கப்­பட முடி­யா­தெனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன் பிர­காரம் முன்னர் உள்ள ஜனா­தி­பதிப் பத­வி­யல்ல, 19ஆம் திருத்­தத்தின் பிர­காரம் அமைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி பத­வி­யையே அது சுட்­டிக்­காட்­டு­கி­றது. ஆகவே முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன ஏற்­ப­டுத்­திய ஜனா­தி­பதி பத­வியை வகித்­த­வ­வர்­க­ளுக்கு குறித்த ஏற்­பாடு பொருந்­தாது.

முன்­னைய ஜனா­தி­பதி முறை­மையின் கீழ் பதவி வகித்­த­வர்கள் தொடர்பில் புதிய ஏற்­பாட்டை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக இருப்பின் அது குறித்து தெளி­வான வச­னத்தை  பயன்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். மேலும் சட்­டங்கள் எதிர்­கா­லத்­திற்கே பொருந்தும். எனினும் கடந்த காலங்­க­ளுக்கு பொருந்­து­மாக இருப்பின் அது தொடர்பில் தெளி­வான வசனம் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். 19 ஆவது திருத்தச் சட்­டத்தில் அவ்­வா­றான தெளி­வான வசனம்  பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.  முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­துங்க மற்றும் மஹிந்த ராஜ­பக்ஷ ஆகி­யோர்­க­ளுக்கு குறித்த ஏற்­பாடு பொருந்­தாது. 

இவ்­வி­வ­காரம் தொடர்பில் சட்ட அறிக்­கை­யினை ஜனா­தி­ப­தி­யினால் மாத்­திரம் பெற முடியும் என அமைச்­ச­ரவை அமைச்சர் ஒருவர் குறிப்­பிட்­டுள்ளார். வேறு எவ­ராலும் அதனைச் செய்ய முடி­யா­தெனக் குறிப்­பிட்­டுள்ளார். எனினும் அவரின் கருத்து யதார்த்­த­மற்­ற­தாகும்.

ஆகவே ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுனவின் தலைவர் என்ற ரீதியில் குறித்த விவகாரம் தொடர்பிலான வழக்கை தாக்கல் செய்வதற்கு தயாராகவுள்ளேன். இது தொடர்பில் செப்படெம்பர் மாதம் ஆரம்பப்பிரிவில் முக்கிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மேலும் இது சம்பந்தாக ஜனாதிபதி சட்டத்திரணிகள் பலர் எம்டமுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.  

அபேட்சரைத் தெரிவுசெய்யும் பிரச்சினையாக இதனை நோக்கக் கூடாது. இது சட்டச் சிக்கலை தீர்த்துக்கொள்ளும் பிரச்சினைாகும். மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னும் தெழிவான தீர்மானத்திற்கு வரவில்லை. அது தொடர்பில் பின்னர் தீர்மானிப்பார் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.