"தீர்வு காணப்பட வேண்டுமாயின் ரயில் கட்டணங்கள் நியாயமான முறையில் அதிகரிக்கப்பட வேண்டும்"

Published By: Digital Desk 7

21 Aug, 2018 | 11:48 AM
image

(இராஜதுரை ஹஷான்)

"ரயில் சாரதிகளின் மாத கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படமாட்டாது என்று  குறிப்பிடுவதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சருக்கு எவ்வித தகுதிகளும் கிடையாது.  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ரயில் தொழிற்சங்கத்தினருக்கு கொடுத்த வாக்குறுதிகளை  நிறைவேற்ற வேண்டும்" என ரயில் கட்டுப்பாடு ஒழுங்குப்படுத்தல் சங்கத்தின் செயலாளர்  பி. எம் பீறிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"ரயில் தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளுக்கு அமைச்சர் மங்கள சமவீர இடையூறாக செயற்படுகின்றார். எமது தொழிற்சங்க பிரச்சினைகள் தொடர்பில்  ஆராய  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட   அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழுவினரின் பரிந்துரைகளை இவரே நிராகரித்து  பிரச்சினைகளை தோற்றுவித்தார்.

இதனை தொடர்ந்து  இம்மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையில் ரயில் தொழிற்சங்கத்தினர் பணி புறக்கணிப்பினை மேற்கொண்டனர்.  போராட்டத்தின் காரணமாக மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.  பின்னர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இவ்விடயத்தில் நேரடியாக  இணங்கி 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவரது  இல்லத்தில் எம்மை அழைத்து கலந்துரையாடினார் பின்னர்  2 மாத காலத்திற்குள்  நிரந்தர தீர்வினை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தார்.  அதனை தொடர்ந்து  ரயில் தொழிற்சங்க போராட்டம்  கைவிடப்பட்டது.

ஆனால் தற்போது சில பொருளாதார காரணங்களை சுட்டிக்காட்டி அமைச்சர் மங்கள் சமரவீர  ரயில் சாரதிகளுக்கு  வழங்குவதாக குறிப்படப்பட்ட வேதன அதிகரிப்பை தற்போது வழங்க முடியாது  என்று குறிப்பிடுவது  மீண்டும் தொடர் போராட்டங்களை தோற்றுவிப்பதாகவே காணப்படுகின்றது.  இருப்பினும் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை மீற மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.

நிதியமைச்சர்  என்ற வகையில் அமைச்சர் மங்கள சமரவீர தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு இணங்கவே இவரும் செயற்பட  வேண்டும். ஆகவே  ஜனாதிபதி இவரது கருத்துக்களை ஏற்க மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒக்டோபர்  முதலாம் திகதி முதல் ரயில் கட்டணங்கள் அமுலுக்கு வர உள்ளது. ஏனைய அரச போக்குவரத்து  சேவையின் கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் மிக குறைவாகவே காணப்படுகின்றது.

ரயில் கட்டணங்களில்  2008ஆம் ஆண்டிற்கு பிறகு எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை ஆகவே தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் ரயில் கட்டணங்கள் நியாயமான முறையில் அதிகரிக்கப்பட வேண்டும்.

 

வெகுவிரைவில் ரயில் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது." என்று  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02