மாகாண சபை தேர்தல் தாம­த­ம­டை­வது தொடர் பில் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கமே பொறுப்புக்கூற வேண்டும் என சுயா­தீன  தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின்  தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய  தெரி­வித்­துள்ளார்.

தற்­போது மாகா­ண­சபைத் தேர்தல் முறைக்­கான பிரே­ரணை ஒன்றை முன்­வைத்­துள்­ளனர். அந்த முறை­மைக்கு எந்தத் தொகுதி என்­பதை முதலில் அடை­யா­ளங்­காண வேண்டும். எந்­தெந்த தொகுதி என தற்­போது அறிக்­கையும் தயார் செய்­துள்­ளனர்.

தொகுதி பிரிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் காணப்­படும் திருத்த சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்றம் அங்­கீ­க­ரிக்க வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தைத் தாண்டி தேசிய தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு செல்­லக்­கூ­டிய அதி­கா­ரத்தை வழங்­க­வில்லை. இந்த விடயம் தொடர்பில் முக்­கி­ய­மா­ன­தொரு வழக்கு தீர்ப்பும் காணப்­ப­டு­கின்­றது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் குறித்த தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் தாம­த­ம­டை­வது தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்ட குறித்த வழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக உள்­ளூ­ராட்­சி­மன்ற மற்றும் மாகா­ண­ச­பைகள் அமைச்­சரும் தேசிய தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வரும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர். நாங்கள் அந்த வழக்கு விசா­ர­ணை­யின்­போது ஆஜ­ரா­கி­யி­ருந்தோம்.

அமைச்­ச­ரினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு திருத்த சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­படும் வரை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் தேர்­தலை நடத்­த­மு­டி­யாது என உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்­பொன்று உள்­ளது. தேர்தல் தாம­த­ம­டை­வது தொடர்பில் அர­சாங்கம் பொறுப்­பேற்க வேண்டும்.

பொருட்­கோ­டலின் கீழ் புதி­ய­சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டாது என தற்­போது கூறு­கின்­றனர். எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் இந்த நட­வ­டிக்­கைகள் அனைத்தும் நிறை­வ­டை­யும்­பட்­சத்தில், 2018 ஆம் ஆண்­டுக்­கான வாக்­காளர் இடாப்­பினை எங்­களால் அத்­தாட்­சிப்­ப­டுத்த முடியும்.

அப்­ப­டி­யென்றால் இந்த வரு­டத்தின் இறுதிப் பகு­தியில் அல்­லது அடுத்த வரு­டத்தின் ஆரம்­பத்தில் கலைக்­கப்­பட்­டுள்ள 3 மாகா­ண­ச­பைகள் மற்றும் கலைக்­கப்­ப­ட­வுள்ள 3 மாகாணசபைகளையும் சேர்த்து ஒரே தடவையில் தேர்தலை நடத்த முடியும். தேவை ஏற்படும்பட்சத்தில் மார்ச் மாதம் பதவிக்காலம் நிறைவடையவுள்ள ஏனைய 2 மாகாணசபைகளும் இணைத்துக்கொண்டு தேர்தலை நடத்த முடியும்“ என தெரிவித்துள்ளார்.