தனது பிரசவத்திற்காக நியூஸிலாந்து பென் அமைச்சர் ஒருவர் சைக்கிளை தானே ஓட்டிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் பாடு பொருளாக உலா வருகிறது.

நியூஸிலாந்தின் இணை போக்குவரத்து துறை அமைச்சரான 38 வயதுடைய ஜூலி அன்னே ஜென்டர் தனது முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காக சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

வீட்டிலிருந்து சுமார் ஒரு கி. மீ தூரம் தன்னுடைய சைக்கிளை தானே ஓட்டிக்கொண்டும், செல்பி எடுத்துக் கொண்டும் சாதாரணமாக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

ஜூலி எடுத்துக் கொண்ட செல்பிகள் சமூக வலைத்தளங்களில் பிரபலமானதோடு, பல பெண்கள் ஜூலியின் மன தைரியத்தை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.