அடுத்த சில நாட்களில் குறிப்பாக ஆகஸ்ட் 23ஆம் திகதியிலிருந்து வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் சிறிதளவில் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்தறை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியத்தைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய, வடமேல், வடமத்திய, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது