ஆசியக் கிண்­ணத்தில் கடைசி லீக் போட்­டியில் உமர் அக்மல் மற்றும் சப்ராஸ் அஹ­மட்டின் அதி­ரடி ஆட்­டத்­தினால் இலங்கை அணியை 6 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வென்­றது பாகிஸ்தான்.

ஆசியக் கிண்­ணத்­தி­லி­ருந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளி­யே­றி­விட்ட நிலையில் நேற்று நடந்த போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து 150 ஓட்­டங்­களைப் பெற்­றது.

இதில் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான சந்­திமால் 58 ஓட்­டங்­க­ளையும், டில்ஷான் 75 ஓட்­டங்­க­ளையும் விளா­சினர்.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து 151 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.

பாகிஸ்தான் அணி சார்­பாக அதிரடியாக ஆடிய ஷர்ஜில் கான் (31), உமர் அக்மல் (48), ஷர்பாஸ் அஹமட் (38) ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.