இன்று காலை 11:15 மணியளவில் பாலமீன்மடுவில் உள்ள தனியார் காணிகளுக்குள் பாரிய தீ பரவல் இடம்பெற்றது. இவ் அனர்த்தம் தொடர்பில் பிரதேச இளைஞர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இத் தீ விபத்தில் குறித்த காணிக்குள் தரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு மீன்பிடி படகு முற்றாகவும் இன்னுமோர் படகு பகுதியளவிலும் எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன் 15 தென்னை, 06 பனை மரங்கள் உள்ளிட்ட பல பயன்தரும் மரங்களும் முற்றாக எரிந்து போயுள்ளன.

இக்காணியானது தனியார் காணியாய் இருந்த போதும் பல காலமாக உரியவர்களால் துப்பரவு செய்யப்பட்டாமல் இருந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்திருந்தனர்.