கொழும்பு மவுன்ட்லவேனியா பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறிப்பிட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டுள்ள சிலரிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களை தொடர்ந்தே களியாட்ட நிகழ்வு நடைபெற்ற பகுதிக்கு சென்ற பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவ்வேளை அங்கு காணப்பட்ட 28 பேரிடம் போதைப்பொருட்கள் காணப்பட்டதை தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தெமட்டகொட,நுகேகொட, ராகம,புத்தளம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் 30 வயதிற்குஉட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று கல்கிசை நீதிமன்றத்தில் இவர்களை  காவல்துறையினர் ஆஜர் செய்தவேளை 28 பேரில் 15 வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.