தெற்கு ஆசியாவில் பாரிய வாகன தரிப்பிட முகாமைத்துவ நிறுவனமான டெனாகா கார் பார்க் தமது கொடுப்பனவு பங்காளராக இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வங்கியான பிரீமீ (FriMi) உடன் அண்மையில் கைகோர்த்துள்ளது.

அதற்கமைய வாகன ஓட்டுநர்கள் தமது வாகன தரிப்பிடத்துக்கான கொடுப்பனவுகளை டெனாகா கார் பார்க் செயலி (எப்) ஊடாக பிரீமியை பயன்படுத்தி செலுத்தலாம். பிரீமி நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கீழ் இயங்குகின்றது.

குறித்த உடன்படிக்கையில் டெனாகா கார் பார்க் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான துமிந்த ஜயதிலக்க மற்றும் பிரீமி டிஜிட்டல் வங்கியின் பிரதானி நசீம் மொஹமட் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த உடன்படிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த துமிந்த ஜயதிலக்க “ எமது கொடுப்பனவு பங்காளராக பிரீமி உடன் செயற்பட கிடைத்தமை மகிழ்ச்சியாகும். பாரிய அளவு விஸ்தரிப்பான சேவையை கொண்ட டிஜிட்டல் வங்கியான பிரீமீ இலங்கையின் பல்வேறு வங்கிகளுடன் தொடர்புபட்டுள்ளதால் வாகன உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் தமது கொடுப்பனவுகளை இலகுவாக செலுத்தலாம்” என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரீமி டிஜிட்டல் வங்கியின் பிரதானி நசீம் மொஹமட் “ ஸ்மார்ட் சிட்டி எனப்படும் வளர்ச்சியடைந்த நகரங்களுக்கு செல்லும்போது வாகன தரிப்பிட கொடுப்பனவுகளை மொபைல் அப்கள் ஊடாக செலுத்த வேண்டும். இது கொழும்பு நகருக்கும் தேவையானது. 

வாடிக்கையாளர்களுக்கு பிரீமி ஊடாக சிறந்த சேவையை வழங்க முடியும். பிரீமி டிஜிட்டல் வங்கியிலுள்ள வசதிகள் காரணமாக வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரரதிகளுக்கு தமது கொடுப்பனவுகளை செலுத்துவது இலகுவாகியுள்ளது” என கூறினார்.