தனது சாதனையை புதுப்பித்த நீச்சல் வீரர் மெத்தியூ இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தார்

Published By: Digital Desk 4

20 Aug, 2018 | 02:52 PM
image

ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் நீச்சல் போட்­டியில் இலங்கை வீரர் மெத்யூ அபே­சிங்க தனது சாத­னை­யையே புதுப்­பித்தார்.

இந்­தோ­னே­ஷி­யாவில் நேற்று முன்­தினம் ஆரம்­ப­மான 18 ஆவது ஆசிய விளை­யாட்டு விழாவின் முதல் நாளான நேற்று  நடை­பெற்ற போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்தார். 

இது இலங்கை தேசிய சாத­னை­யாகப் பதி­வா­கி­யி­ருந்­தாலும் கூட மெத்­தியூ இறுதிப் போட்­டியில் பங்­கு­பற்றும் வாய்ப்பைத் தவ­ற­விட்டார்.

45 ஆசிய நாடுகள் பங்­கேற்­றுள்ள இவ்­வி­ளை­யாட்டு விழாவின் உத்­தி­யோ­கபூர்வ தொடக்க விழா கண்­கவர் கலை நிகழ்ச்­சி­க­ளுடன் சனிக்கிழமை இரவு ஆரம்­ப­மா­னது.

அதன் தொடர்ச்­சி­யாக விளை­யாட்டுப் போட்­டிகள் நேற்று ஆரம்­ப­மா­யின. இந்­நி­லையில், நீர்­நிலைப் போட்­டி­களின் ஆரம்ப சுற்றுப் போட்­டிகள் நேற்றுக் காலை ஜகார்த்­தா­வி­லுள்ள கலேரா பங் கர்னோ விளை­யாட்­ட­ரங்கின் நீச்சல் தடா­கத்தில் தொடங்­கி­ன.

இதில் இலங்கை அணியின் நட்­சத்­திர நீச்சல் வீர­ரான மெத்தியூ அபே­சிங்க, ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் ப்ரீ ஸ்டைல் போட்­டியின் 3 ஆவது தகுதிச் சுற்றில் பங்­கு­பற்­றி­யி­ருந்தார்.

பந்­தய தூரத்தை 1:50:97 வினாடி­களில் நிறை­வு­செய்த மெத்­தியூ, 6 ஆவது இடத்தைப் பெற்­றுக்­கொண்­ட­துடன் ஒட்­டு­மொத்த நிலையில் 12ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்­டியில் பங்­கு­பற்றும் வாய்ப்பை இழந்தார்.

முன்­ன­தாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடை­பெற்ற பொது­ந­ல­வாய விளை­யாட்டு போட்­டியில் ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் ப்ரீ ஸ்டைல் போட்­டியில் மெத்தியூ அபே­சிங்க, புதிய தேசிய சாதனையைப் படைத்­தி­ருந்தார்.

ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் நீச்சல் போட்­டி­களின்  2ஆவது தகுதிச் சுற்றில் பங்­கு­பற்­றிய மற்­று­மொரு இலங்கை வீர­ரான கவிந்­திர நுக­வெல, 1:56:01 வினாடிகளில் போட்­டியை நிறை­வு­செய்து முத­லி­டத்தைப் பெற்­றுக்­கொண்டார்.

எனினும், ஒட்­டு­மொத்த நிலையில் 26ஆவது இடத்தைப் பெற்­றுக்­கொண்ட கவிந்­திர நுக­வெ­ல­வுக்கும் இறுதிப் போட்­டிக்கு தெரி­வாகும் வாய்ப்பு கிடைக்­க­வில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31