அமெ­ரிக்­காவால்  துருக்­கியை அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைக்க முடி­யாது என  துருக்­கிய ஜனா­தி­பதி  தாயிப் எர்­டோகன் சூளு­ரைத்­துள்ளார்.

 துருக்­கியில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள  அமெ­ரிக்க மத­போ­தகர் ஒரு­வரை  விடு­தலை செய்­வ­தற்கு அந்­நாடு தொடர்ந்து மறுப்புத் தெரி­வித்து வரு­கின்ற நிலையில் அந்­நாட்­டிற்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மி­டை­யி­லான முறுகல் நிலை அதி­க­ரித்து வரு­கி­றது.

 மேற்­படி மத­போ­தகர் விவ­காரம் குறித்து அமெ­ரிக்கா  துருக்கி மீது வர்த்­தகத் தடை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் துருக்­கியும் தனது பங்­கிற்கு அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து  இறக்­கு­மதி செய்­யப்­படும் இலத்­தி­ர­னியல் பொருட்கள் மீதான சுங்க வரியை அதி­க­ரித்­துள்­ளது.

 இந்­நி­லையில் தனது ஆளும்  நீதி மற்றும் அபி­வி­ருத்திக் கட்­சியின்  உறுப்­பி­னர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் கலந்து கொண்ட கூட்­டத்தில்  உரை­யாற்­றிய எர்­டோகன், "எம் மீது தந்­தி­ரோ­பாய  ரீதியில் இலக்­கு­வைக்க முயற்­சிக்கும்   அதே­ச­மயம் தம்மை  எமது தந்­தி­ரோ­பாய பங்­கா­ளர்­க­ளாக  காண்­பிப்­ப­வர்­க­ளிடம் நாம் சர­ண­டையப் போவ­தில்லை.  சிலர் எமக்கு  பொரு­ளா­தாரம்,  தடைகள் , வெளி­நாட்டு நாண­ய­மாற்று வீதங்கள் மற்றும் வட்டி வீதங்கள் என்­ப­வற்றால்  அச்­சு­றுத்தல் விடுக்­கின்­றனர். நாங்கள் உங்கள் தந்­திர வித்­தை­களை அறிவோம். நாங்கள் உங்­களை  எதிர்த்து நிற்போம்"   என்று தெரி­வித்தார்.

 அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் துருக்­கி­யி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் அலு­மி­னியம் மற்றும்  உருக்­கிற்­கான சுங்க வரி­களை இரு மடங்­காக அதி­க­ரிக்கப் போவ­தாக அண்­மையில் அறி­வித்­த­தை­ய­டுத்து துருக்­கியின் நாண­ய­மான  லிராவின் பெறு­ம­தி­யா­னது வீழ்ச்­சி­ய­டைந்­தது. இத­னை­ய­டுத்து துருக்கி  அநேக அமெ­ரிக்க இறக்­கு­ம­திகள் மீது சுங்க வரி­களை  அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுத்­தது.

இந்­நி­லையில் துருக்கி  எல்­லையைக் கடந்த இரா­ணுவ செயற்­பா­டு­களை விரி­வு­ப­டுத்த அழுத்தம் கொடுக்­க­வுள்­ள­தாக   எர்­டோகன்   ஆளும் கட்சிக் கூட்­டத்தில் உரை­யாற்­று­கையில் மேலும் தெரி­வித்தார்.

 துருக்கி இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர்  சிரி­யாவில்  அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின்  ஆத­ர­வுடன் செயற்­படும்  சிரிய ஜன­நா­யகப் படையின் முது­கெ­லும்­பா­க­வுள்ள  குர்திஷ் மக்கள் பாது­காப்பு படைப் பிரி­வி­ன­ருக்கு எதி­ராகப் போராட தனது படை­யி­னரை அனுப்பி வைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.