வடக்கு- கிழக்கில் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் உள்ள உயர் பாது­காப்பு வலயக் காணிகள் உள்­ளிட்ட, 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடு­விக்­கப்­படும் என்று புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் தெரி­வித்­துள்ளார்.

"தனியார் காணி­களில் உள்ள இரா­ணுவ முகாம்­களை வேறு இடங்­க­ளுக்கு நகர்த்தி, டிசம்பர் மாதத்­துக்கு முன்­ன­தாக, அந்தக் காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­காக, அர­சாங்கம் 780 மில்­லியன் ரூபாவை ஒதுக்­கி­யுள்­ளது.

இரா­ணுவ முகாம்­களை இட­மாற்றம் செய்யும் நட­வ­டிக்­கையைப் பூர்த்தி செய்­வ­தற்­காக, இந்த நிதியை விடு­விப்­ப­தற்கு திறை­சேரி அதி­கா­ரிகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடந்த கூட்­டத்தில் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.

பொது­மக்­களின் காணி­களை விடு­வித்து இரா­ணுவம் தமது பாது­காப்பு எல்­லை­களை மீள ஒழுங்­கு­ப­டுத்தும்.

விடு­விப்­ப­தற்கு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணிகள், யாழ். மாவட்­டத்தில், வலி வடக்கில் அச்­சு­வேலி, மயி­லிட்டி வடக்கு  பகு­தி­க­ளிலும், தென்­ம­ராட்­சி யில் கிளாலி, பளை, முக­மாலைப் பகு­தி­க­ளிலும், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில், முறக்­கொட்­டாஞ்­சே­னை­யிலும் உள்­ளன.

இந்தக் காணி­களின் உரிமையாளர்களை உறுதிப்படுத்த, அந்தந்த பிரதேச செயலர் கள் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

--