புத்தளம், ஆனமடுவ பகுதியில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முக்கிய சூத்திரதாரி உட்பட மூவரை இன்று அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

நேற்று முந்தினம் (18.08.2018) சனிக்கிழமை புத்தளம் ஆனமடுவ ஆண்டிகம பகுதில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலைக்குள்  புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்தவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்த சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலேயே இன்று அதிகாலை பிரதான சூத்தரதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் ஆண்டிகம பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள அரசியல்வாதியின் ஆதரவாளர்களே  தன்னைத் தாக்கியுள்ளதாக தாக்குதலுக்குள்ளான குறித்த சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது