சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்றைய தினம்(20-08-2018) சத்திரச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.  

ஞானசார தேரருக்கு கடந்த புதன்கிழமை சத்திர சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு இருதய துடிப்பு பிரச்சினை காரணமாக அது பிற்போடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய நிலையில் அவர் சத்திரச் சிகிச்சை செய்யப்படக் கூடிய நிலையில் உள்ளதால்,  சத்திரச்சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ ஜனவர்தனபுர வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் பிபாத் வேரத்த தெரிவித்தார்.