பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாக்கிஸ்தானின் இராணுவ தளபதியை கட்டியணைத்ததை  பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

நவ்ஜோத் சிங் சித்துவின் இந்த செயல் வெட்கக்கேடானது என பஞ்சாபின் பாஜக தலைவர் சுவைத் மலிக் வர்ணித்துள்ளார்.

மேலும் பாக்கிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஸ்மீரின் பிரதம அதிகாரிக்கு அருகே சித்து அமர்ந்திருந்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

பாக்கிஸ்தானினால் இந்திய வீரர்கள் கொல்லப்படும்போது பாக்கிஸ்தான் இராணுவதளபதியை கட்டியணைத்ததன் மூலம் சித்து  அவரிற்கு நன்றி தெரிவித்தாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்