பாக்கிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கானுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானின் புதிய பிரதமரிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த நட்பை மேலும் வலுப்படுத்துவதற்காக  பாக்கிஸ்தானின் புதிய பிரதமருடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கு ஆவலுடன் உள்ளதாக சிறிசேன தெரிவித்துள்ளார்.

இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நான் ஆர்வமாக உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் இரு நாடுகளும் நெருக்கமான  உறவுகளை கொண்டுள்ளன என சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் இம்ரான்கானிற்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இம்ரான்கான் பாக்கிஸ்தானிற்கு மாத்திரமல்ல தென்னாசியாவிற்கும் முழுஉலகிற்குமான உந்துசக்தி என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தொழில்சார் தன்மை வெற்றியை கொண்டுவரும் என்பதற்கான உதாரணம் இம்ரான்கான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.