நான்கு பேர்கொண்ட கும்பல் வீடு புகுந்து நடத்திய கொடூரத் தாக்குதலில் காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் காரைநகரில் நேற்று  இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கருங்காலி வீதி காரைநகரைச் சேர்ந்த நடராசா தேவராசா (வயது 54) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.