தொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்

Published By: Digital Desk 4

19 Aug, 2018 | 02:00 PM
image

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தொலைபேசியில் பேச வற்புறுத்தியதை தந்தையிடம் கூறிய மாணவியை இளைஞர்கள் உயிரோடு எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் சர்தானா நகரத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் தினமும் மாலையில் வீட்டில் இருந்து மேலதிக வகுப்பிற்கு செல்வது வழக்கம்.

அதன்போது வழியில் சில இளைஞர்கள் நின்று கொண்டு அந்த மாணவிக்கு தினமும் தொல்லை செய்து வந்தனர்.

இந்நிலையில் மேலதிக வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிய அந்த மாணவியை இடைமறித்த இளைஞர்கள் கையில் ஒரு கையடக்க தொலைபேசியை திணித்தனர்.

இந்த தொலைபேசியில் நள்ளிரவு நேரத்தில் தங்களுடன் பேசும்படி அவர்கள் கூறினார்கள். பின்னர் மாணவி அங்கிருந்து வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அந்த வாலிபர்கள் கொடுத்த தொலைபேசியையும் தந்தையிடம் கொடுத்தாள்.

கோபமடைந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் . அவர்கள் தொலைபேசியை கொடுத்த இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு சென்று அந்த இளைஞரின் பெற்றோரிடம் புகார் செய்தனர். மேலும் கடுமையான எச்சரிக்கையும் செய்துவிட்டு வந்தனர்.

இது, அந்த இளைஞருக்கும், அவது நண்பர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் குறித்த இளைஞர்கள் 6 பேரும் மாணவியின் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது வீட்டில் பெற்றோர்கள் இல்லை. மாணவி மட்டும் தனியாக இருந்தாள். அவளிடம் சென்று எப்படி எங்களை பற்றி புகார் செய்யலாம்? என கூறி தகராறு செய்தனர்.

திடீரென அவர்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்தனர். இதில், அவளது உடல் பற்றி எரிந்தது. வீட்டிலும் தீப்பற்றி கொண்டது. பின்னர் வாலிபர்கள் ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.. அங்கு அவள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

மாணவி மீது தீ வைத்தவர்கள் ராஜ்வன்ஸ் பக்டி, தேவேந்திர பக்டி, ரோகித் சைனி, கச்சிராலா சைனி, அமன், தீபக் என தெரிய வந்தது.

பொலிஸார் அவர்களில் 2 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு அந்த ஊரில் அதே போல் பாலியல் தொல்லை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. 2 பேர் கொல்லப்பட்டனர். பல நாட்கள் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10