கட்சியைவிட்டு வெளியே சென்று  விமர்சியுங்கள்  

Published By: MD.Lucias

04 Mar, 2016 | 09:01 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சுதந்திர கட்சியில் இருந்து கொண்டு கட்சியை விமர்சிப்பதைவிட பிரிந்து சென்று செயற்படுவது ஆரோக்கியமானதாகும். ஒரு கட்சிக்குள் இருந்து கொண்டு வேறு அமைப்புகளுடன் இணைந்து செயற்படும் முறை உலகில் எங்கும் இடம்பெறுவதில்லை. இவ்வாறானவர்களுக்கு எதிராக கட்சி தலைமை நடவடிக்கை எடுப்பதானது நியாயமான  விடயம் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.

தேர்தலில் சுதந்திரகட்சி கூட்டுகட்சிகளுடன் இணைந்து போட்டியிடுமே தவிர ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒருபோது சேர்ந்து போட்டியிடாது எனவும் அவர்   குறிப்பிட்டார்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மிகப்பழமை வாய்ந்த கட்சியாகும். நாட்டை ஆட்சி செய்த 68வருட ஆட்சியில் 35வருடத்துக்கும் மேற்பட்ட காலம் சுதந்திர கட்சியே ஆட்சி செய்திருக்கின்றது. இவ்வாறு பலம்  வாய்ந்த கட்சியை பலவீனப்படுத்த இடமளிக்க முடியாது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை வெற்றிபெறச்செய்ய நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். என்றாலும் மக்கள் ஆணை மைத்திரிபால சிறிசேனவுக்கே கிடைத்தது. தேர்தல் பற்றியோ அல்லது பெறுபேறுகள் பற்றியோ யாருக்கும் சவாலுக்குடபடுத்த முடியாது.

பலம் வாய்ந்த கட்சியாகவும் அரசாங்கமாகவும் இருந்தும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றது தொடர்பில் இதுவரை காலமும் நாங்கள்   ஆராய்ந்து பார்க்க வில்லை. அத்துடன் கட்சி யாப்பின் பிரகாரம் சுதந்திர கட்சி தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டார். 

வெறுமனே மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பத்தின் மாத்திரம் கட்சி தலைமை பதவி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படவில்லை. மாறாக அகில இலங்கை செயற்குழு, மத்திய செயற்குழு மற்றும் நிறைவேற்று சபை ஆகியவற்றின் அங்கீகாரத்துடனே தலைவராக நியமிக்கப்பட்டார். அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகவும் பங்காளிக் கட்சிகளின் அங்கீகாரத்துடனேயே தெரிவுசெய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41