இந்திய கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க இஸ்ரோ நிறுவனம்  5 செயற்கைகோள்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளது. 

கேரளாவில் பெரும்பாலான சாலைகள் தடைப்பட்டு இருப்பதால் அந்தப் பகுதிகளில் எவ்வளவு பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

மின்சாரம் இல்லாமல் தகவல் தொடர்பு சாதனங்களும் துண்டிக்கப்பட்டு இருப்பதால் அவர்களது நிலை பற்றி அறிய முடியவில்லை. எனவும் அங்கு சிக்கி இருப்பவர்களும் வெளி இடங்களுடன் தொடர்பு கொள்ள முடியத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ‘இஸ்ரோ’ நிறுவனம் வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க 5 செயற்கைகோள்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளது.

இஸ்ரோ விண்ணில் செலுத்திய ஓசியான் சாட்-2, ரிசோர்ஸ் சாட்-2, கார்டோசாட்-2 மற்றும் 2ஏ, இன்சாட் 3 டி.ஆர். ஆகிய 5 செயற்கை கோள்களும் மழை, வெள்ளம், கடல், நிலப்பரப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல்களையும், புகைப்படங்களையும் அனுப்பி வருகிறது. இந்த 5 செயற்கை கோள்களும் தற்போது கேரளாவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்கவும், மீட்பு பணிக்கு உதவும் பயன்படுத்தப்படுகிறது.

5 செயற்கைகோள்களும் கேரளாவை மிக துல்லியமாக படம் பிடிக்கவும். சாலையில் செல்லும் காரின் எண்ணைக்கூட படம் பிடிக்கும் சக்தி வாய்ந்த கேமராக்கள் உள்ளன.

அதன் மூலம் கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை கண்டுபிடித்து ஐதராபாத்தில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் அனுப்பும். அந்த தகவல் கேரளாவில் முகாமிட்டுள்ள மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டு மக்கள் மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.