பிஜி தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கம் 8.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இதேவேளை, இலங்கைக்கு எவ்விதமான ஆபத்துமில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.