கிளிநொச்சி - இரணைமடு குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய தங்கூசி வலைகளும் மீட்கப்பட்டுள்ளது. 

நாட்டில் தங்கூசி வலைகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு சட்டத்திற்கு விரோதமான முறையில் இரணைமடு குளத்தில் தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் பயன்படுத்திய 30 வலைகளும், குறித்த நபர்களையும் கிளிநொச்சி நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இரணைமடு நன்னீர் மீன்னவர்கள் தெரிவித்தனர்.

குறித்த குளத்தில் மீன்பிடி இன்மையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் இவ்வாறு தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் சிலர் ஈடுபடுவதனால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

.