ஐக்கியநாடுகள் முன்னாள் செயலாளர் கோபி அனான் காலமானார்.

கோபி அனான் காலமானதை அவரால் உருவாக்கப்பட்ட மனிதாபிமான அமைப்பான கோபி அனான் மன்றம் உறுதி  உறுதிசெய்துள்ளது.

அனான் தன்வாழ் முழுவதும் நியாயமான சமாதானம் நிலவும் உலகிற்காக பாடுபட்டவர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகின் எந்த பகுதியில் மக்கள் துயரத்தில் சிக்கினாலும் அல்லது மக்கள்  தேவைகள் காணப்பட்டாலும் அனான் அவர்களை நோக்கி இரக்கம் அனுதாபத்துடன் தனது கரங்களை நீட்டினார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கானாவைசேர்ந்த கோபி அனான் 1997 முதல் 2006 வரை ஐநா செயலாளர் நாயகமாக பணியாற்றியிருந்தார்.

ஐநா செயலாளர் நாயகமாக பணியாற்றிய முதல் கறுப்பினத்தவர் அனான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் உள்நாட்டு மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திய அனான் சிரியாவிற்கான ஐநாவின் விசேட பிரதியாகவும் பணியாற்றியிருந்தார்.

இவரது மனிதாபிமான பணிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.