(ஆர்.விதுஷா)

போலி நாணயத்தாள்களை தம் வசம் வைத்திருந்த  இரு இளைஞர்களை கலேன் - பிந்துனுவெல பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

கலேன் - பிந்துனுவெல பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற தொலைபேசி தகவலுக்கமைய குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே  குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேற்படி சந்தேக நபர்களிடம் இருந்து 70,  1000 ரூபாய் போலி நாணய தாள்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள்  ரத்மல்வெட்டடிய  பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பிரதீபகுமார் ஜயசுன்தர  மற்றும்  குருநாகல்  பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய விமிது பிரியங்க பாலசூரிய  என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.