தர்மபுரம்  பகுதியில் இயங்கிவருகின்ற விடியல் தனியார் கல்வி நிலைய நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்விகற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு  பாலியல் தொந்தரவு  மற்றும் பாலியல் துஷ்பிரயோக முயற்சிகள் செய்யதமை தொடர்பாக  தர்மபுரம் பொலிஸாரால்   வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை அடுத்து குறித்த நிர்வாகி நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 

குறித்த வழக்கை  விசாரித்த பதில் நீதவான் சிவபாலன்  இம்மாதம்  30 .08 .2018 ஆம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார் 

குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு  18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்விகற்று வருகின்ற நிலையில் அங்கு கல்விகற்க வருகின்ற மாணவிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் ,பாலியல் தொந்தரவு பலமுறை இடம்பெற்று வந்துள்ளது.

 இதற்கு நடவடிக்கை எடுக்க எவரும்  முன்வராத நிலையில் கண்டாவளை பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலார் கண்டாவளை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் முயற்சியில் தர்மபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து நிர்வாகி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.