வவுனியா குருமன்காட்டில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

இன்று காலை 8 மணியளவில் குருமன்காட்டிலிருந்து புளியங்குளம் சென்றபோது குருமன்காடு காளிகோவில் வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியினருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். மின்கம்பத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. 

குறித்த சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.