சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதில்லை. அதிலும் பால்ய வயதில் உள்ளவர்கள் பெற்றோர்களாலும், தங்களின் விருப்பதாலும் காபோஹைட்ரேட் மற்றும் சொக்லெட்களை இரவு நேரங்களில் உட்கொள்வதால் அவர்களின் பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

ஆரம்ப நிலையில் பற்களில் சிறிய கருப்பு புள்ளிகள் போல் இருக்கும் பற்சொத்தையின் அறிகுறிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 

இது வளர்ந்து பல்லில் குழி அல்லது ஓட்டை ஏற்பட்டு பற்களில் வலி ஏற்பட்ட பின்னர் தான் வைத்தியர்களை நாடுகின்றனர். 

வைத்தியர்கள் பற்சொத்தையின் வீரியத்தை கணக்கிட்டு,ரூட் கேனல் ட்ரீட்மெண்ட் எனப்படும் பல் வேர்களுக்கான சிகிச்சையை மேற்கொண்டு அங்கிருக்கும் கிருமிகளை அகற்றி, மேலும் அப்பகுதியில் புலப்படாமல் இருக்கும் பூச்சிகளின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் செராமிக் என்ற உலோகத்தால் செய்யப்பட்ட தொப்பி போன்ற கேப் ஒன்றை அங்கு பொருத்திவிடுவார்கள். 

ஆனால் அதற்கு பின்னர் வைத்தியர்கள் சொல்லும் அறிவுரையை பின்பற்றவேண்டும். அதை அலட்சியப்படுத்தினால் அங்கு மீண்டும் பாதிப்பு உண்டாகி பல்லை அகற்றவேண்டிய நிலை உருவாகலாம்.