யேமனில் 40 சிறுவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான குண்டுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்பதை நிபுணர்கள் உறுதிசெய்யதுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

யேமனில் சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணியினர் மேற்கொண்ட குண்டுவீச்சு தாக்குதலில் 40 சிறுவர்கள் கொல்லப்பட்டமை சர்வதேச அளவில் பெரும் சீற்றத்தை உண்டுபண்ணியுள்ளது.

இந்நிலையிலேயே அமெரிக்காவினால் வழங்கப்பட்ட குண்டுகளே இந்த தாக்குதலிக் போது பயன்படுத்தப்பட்டதாக சிஎன்என்  தெரிவித்துள்ளது.

யேமனியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் வெடிகுண்டுநிபுணர்களுடன் உதவியுடன் இதனை உறுதிசெய்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான லொக்கீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்த 227 கிலோகிராம் எடையுள்ள லேசர் மூலம் ஏவப்படும் எம்கே 82 என்ற குண்டே சிறுவர்கள் பயணம் செய்த விமானத்தின் மீது வீசப்பட்டதாக  சிஎன்என் தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு யேமனில் மரணவீடொன்றின் மீது இதேபோன்றதொரு குண்டே வீசப்பட்டது இதன் போது 150ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

மரணச்சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வீடொன்றின் போது  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இந்த வகை குண்டுகளை சவுதி அரேபியாவிற்கு வழங்குவதை  அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா  தடை செய்திருந்தார். மனித உரிமை கரிசனைகளை காரணம் காட்டி அவர் இந்த தடையை விதித்திருந்தார்.

எனினும் டிரம்ப் நிர்வாகம் இந்த தடையை நீக்கியிருந்தது.

மார்ச் மாதம் யேமனின் சந்தையொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 80 பேர் கொல்லப்படுவதற்கும் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட குண்டுகளே காரணம் என குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.