ஜப்பான் மற்றும் கொரியாவில் தொழில் பெற்றுத்தறுவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பண மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதிகாரிகொட, தர்காநகர் என்ற முகவரியில் வசித்துவரும் நிஷாந்தி சான்ந்தனி மெனிகே என்ற பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.