அம்பகமுவ பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் மத்திய பிரிவு தோட்டமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பிரதான வீதியானது தொடரும் மழையினால் வெள்ள நீரில் முழ்கியுள்ளது.

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கால்வாய் ஒன்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததன் காரனமாக குறித்த இவ் வீதியனாது 03அடி உயரத்திற்கு வெள்ள நீரில் முழ்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

 குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் வாகன சாரதிகள், பொதுமக்கள் மற்றும்  பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் மத்திய பிரிவிற்கான கால்வாயினை அகலபடுத்தி தருமாறு குறித்த தோட்டமக்கள் தோட்ட நிர்வாகத்திடமும் ,சம்பந்தபட்ட அதிகாரிகளிடமும் பலமுறை கோறிக்கை விடுத்து வந்த போதிலும் குறித்த ஆற்றினை அகலபடுத்தி தருவதில் தாமதம் செலுத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் இதற்கான தீர்வை விரைவாக பெற்று தர வேண்டுமென தோட்ட பொது மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.