மன்னார் அடம்பன் கறுங்கண்டல் ஆலயத்தில் ஒருநாள் இலவச மருத்துவ முகாம் அடம்பன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இலவச மருத்துவ முகாமில் மூக்கண்ணாடிகள் வழங்கல், ஏனைய நோயாளிகளுக்கும் வைத்தியர்களினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கிவைக்கப்பட்டது.

மன்னாரில் மிஷனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒருநாள் இலவச வைத்திய முகாமில் கறுங்கண்டல் ஆலயத்தின் பங்குத்தந்தை, அடம்பன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டு தெரிவு செய்யபட்டவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகளை வழங்கிவைத்தனர்.