மகப்பேற்று வைத்தியர்கள் இன்மையால் கற்பிணி பெண்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.  மாற்றீடாக பெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் என அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் வினவியபுாதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டிருந்தார். 

கிளிநொச்சி வைத்தியசாலையில் அண்மை காலமாக மகப்புற்று வைத்தியர்கள் இன்மையால் கற்பிணி பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். அது மாத்திரமல்லாது பெண் நோயியல் தொடர்பான பிரச்சினைகளிற்கும் முகம் கொடுத்தவரருகின்றனர்.

அவர்களுக்கான தீர்வு தொடர்பில் வடமாகாண மகளிர் அமைச்சர் என்ற வகையில் பெண்களின் இந்த பிரச்சினை தொடர்பில் உங்கள் கருத்த என்ன என ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் இவ்வாறான பிரச்சினை மன்னாரில் காணப்பட்டது. இதன் காரணமாக அவசர சிகிச்சைக்காக வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிற்கு நோயாளர்களும், கற்பிணி பெண்களும் அனுப்பப்பட்டனர். 

இது வடமாகாணம் தழுவி பாரிய பிரச்சினையாக உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்கு பின்னர் வேறு மாகாணங்களில் சேவையாற்றிவரும் வைத்தியர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். 

இவ்வாறு பல்வேறு மருத்துவம் சார் பிரச்சினைகள் வடக்கில் காணப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் நாம் மத்திய சுகாதார அமைச்சருக்கு எழுத்துமூலம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருகின்றோம்.

ஆனால் இன்றுவரை குறிதத் விடயம் தீர்ந்ததாக இல்லை. இந்நிலையில் மக்களின் நலன் கருதி பெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தற்காலிகமாக பணிக்கமர்த்தி, தற்காலிக தீர்வையேனும் பெற்று தாருங்கள் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.