மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பெருந்துறை சந்தியில் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்டவர் மீது பஸ் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று  இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் பாதசாரி படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் இருதயபுரம் பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தையடுத்து குறித்த பிரதேசத்தில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், அங்கிருந்த பொதுமக்கள் பஸ் மீது தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளனர்.

ஆனால், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தாக்குதல் இடம்பெறாது தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து, பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளனர்.