மாந்தை கிழக்குப்பிரதேசத்தில் மீள்குடியேறிய ஆயிரத்து 667 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டபோதும் 899 குடும்பங்களுக்கான நிரந்தர வீட்டுத்தேவைகள் காணப்படுவதாக பிரதேச செயலகத்தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 15 கிராம அலுவலர்பிரிவுகளிலும் மூவாயிரத்து 83 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

இந்நிலையில் ஆயிரத்து 667 புதிய வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டதுடன், பகுதியளவில் சேதமடைந்த 575 வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இவைதவிர, இரண்டாயிரத்து 96 மலசலகூடங்கள், 105 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 208 கிணறுகளும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஆயிரத்து 709 குடும்பங்ளுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

899 குடும்பங்களுக்கான புதிய வீடுகள் 75 குடும்பங்களுக்கான பகுதித்திருத்த வீடுகள் 50 மலசலகூடங்கள் 250 கிணறுகள், 270 திருத்தப்படவேண்டிய கிணறுகள் போன்ற  தேவைப்பாடுகள் காணப்படுவதுடன் ஆயித்து 100 குடும்பங்களுக்கா வாழவாதார உதவிகளும் தேவைப்பாடாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.