சீனாவில் காதலர் தினம் "கிஷி" என்ற பெயரில், 2000 வருடங்களுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய விழா இன்று தென் மற்றும் கிழக்கு சீன மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

சீனாவின் புராணக் கதைகளின் படி காளை போன்ற வீரமுடைய ஆண் மகனும் தூக்கணாங்குருவி போன்ற இனிமையான குரலினுடைய பெண் மகளும் வருடாந்தம் இத் தினத்தில் பால் வீதியில் நட்சத்திரக் கூட்டத்திற்குள் சந்தித்துக் கொள்வதாகவும் பின்னர் மீண்டும் பிரிந்து அடுத்த வருடம் இதே நாளில் சுவர்க்கத்தில் சேர்ந்து கொள்வார்கள் என்பது நம்பிக்கை

இந் நம்பிக்கையின் படியே சீனாவில் பாரம்பரிய காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தென் சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் சுச்சுன் கிராமத்தில் இவ் விழா கிஷி என்ற பெயரில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இவ் விழாவில் குறித்த பகுதிப் பெண்கள் தூக்கணாங் குருவியின் குரலையுடைய பெண் தெய்வத்தை தாமரை வடிவ விளக்குளை ஏற்றி வழிபடுவதோடு சுறுசுறுப்பான மற்றும் வீரமான காதலன் வேண்டும் என பிரார்த்தனை செய்வது வழக்கமாகும்.

இக் காதலர் தினக் கொண்டாட்டம் இன்று ஆரம்பித்து இன்றிலிருந்து தொடர்ந்து ஒரு மாதத்திற்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.