காளி கோயிலில் தேங்காய் உடைத்த எதிர்க் கட்சியினர்..! 

Published By: MD.Lucias

07 Mar, 2016 | 10:25 PM
image

சுதந்திரமாக நாட்டை உருவாக்கும் நோக்கிலும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் குமாரவின் வீட்டின் மீதான தாக்குதலை கண்டித்தும் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கூட்டு எதிர்க் கட்சியினர் இன்று முற்பகல் முகத்துவாரம் காளி கோவிலில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க காளி கோவிலில்  இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் ஜகத் குமார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன,

நாட்டு மக்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய நிலை தற்போது இல்லை. நல்லாட்சி என்று கூறிக்கொண்டு அராஜகம் செய்யும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளியிட்டு வரும்  ஜகத் குமாரவின் வீடு மற்றும் அவருடைய வாகனங்கள் கடந்த மாதம் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளன. 

ஊடகங்களின் மீதான அடக்குமுறை வலுவடைந்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கும் உர மானியத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே இவ்விதமான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று நாங்கள் காளி தெய்வத்துக்கு தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினோம். 

மேலும் இந்நாட்டு மக்கள் அனைவரும் தாம் விரும்பிய சமயத்தை பின்னபற்றவும் ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படவும் காளி தெய்வம் ஆசிர்வாதம் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இங்கு கருத்து தெரிவித்த மேல்மாகாணசபை உறுப்பினர் ஜகத் குமார,

 தலவத்துகொடையில் அமைந்துள்ள எனது வீட்டின் மீது கடந்த மாதம் 18 ஆம் திகதி இரவு இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிகொண்டு இருக்கும் இந்த அரசாங்கத்தின் குறைபாடுகளை நாம் சுட்டிகாட்டியதால் எம்மை கொலை செய்ய முயற்சி செய்து முடியாமல் போனமையால் எமது உடமைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு பல இலட்சம் ரூபா நஷ்ட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த மரணத் தாக்குதலை மேற்கொண்டவர்கள் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டவர்கள் அல்லது அவர்களால் வழிநடத்தப்படும் நபர்களாவர். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை. 

நாட்டின் நீதி, சட்டம், பொலிஸாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை பெற்றுகொடுக்க வேண்டும் என காளி தெய்வத்திடம் வேண்டுதலை மேற்கொண்டுள்ளோம்.

 மேலும் விவாசாயிகளின் பிரச்சினை, நாட்டு மக்களின் பிரச்சினைகளை நிவர்த்திய செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைவிடுத்து ஊடகங்களின் முன் வந்து கேலிக்கையான விடயங்களை பேசிக்கொண்டு இருக்க வேண்டாம். இல்லாவிட்டால் நாம் நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று இந்த அரசாங்கத்துக்கு எதிராக தேங்காய் உடைக்க நேரிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19