மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீவிர உணவு பிரியர் என  பணியாற்றிய அதிகாரிகளும், நெருக்கமான பத்திரிகையாளர்களும் இதுபற்றிய சுவையான தகவல்களை நினைவுகூர்ந்துள்ளனர். 

மத்திய அமைச்சர் கூட்டங்களில் கூட வாஜ்பாய் உப்புக்கடலையை கொறித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு தடவையும் தட்டு நிறைய அதை நிரப்பி வைக்க வேண்டும். கூட்டம் முடிவடையும்போது, தட்டு காலியாகி இருக்கும்.

வாஜ்பாய்க்கு இனிப்புகளும், கடல் உணவுகளும் குறிப்பாக இறால் மிகவும் பிடிக்கும். எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரின் புகழ்பெற்ற உணவு வகைகளை கேட்டு வாங்கி உண்பார்.

வாஜ்பாயின் சீடரான லால்ஜி தாண்டன், லக்னோவிலிருந்து கபாப் உணவுவகைகளை வாங்கி வந்து தருவார்.

மத்திய அமைச்சர் விஜய் கோயலுக்கு பழைய டில்லியிலிருந்து சாட் உணவுவகைகளை வாங்கி வரும் பொறுப்பு.

தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திராவிலிருந்து இறால் வாங்கி வருவார்.

ஏராளமான மசாலாவுடன் பக்கோடா உட்கொள்வது, மசாலா தேனீர் அருந்துவதும் வாஜ்பாய்க்கு பிடித்தமான வி‌டயம்.

ஒருமுறை அரசாங்க விருந்தின்போது, உணவு பகுதியில், குலாப் ஜாமுன் உள்ளிட்ட இனிப்புவகைகள் அணிவகுத்து இருந்ததை பார்த்தவுடன், வாஜ்பாய் அந்த பகுதிக்கு நகர்ந்தார்.

வாஜ்பாய்க்கும் நன்றாக சமைக்கத் தெரியும். தன்னை சந்திக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு அவரே ஏதேனும் ஒரு உணவுவகையை சமைத்து வழங்குவார். அது பெரும்பாலும் இனிப்புவகையாகவோ அல்லது அசைவமாகவோ இருக்கும்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது கூட வாஜ்பாய் சமோசா உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக அதிகாரிகள் நினைவு கூர்ந்தனர்.