விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தனது ஆதரவாளர்களிற்கு வழங்குவதற்கு இலவச அனுமதிச்சீட்டுகள் எதனையும் வழங்கவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்  இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளிற்கு இடையிலான ஒரு நாள் போட்டிகளை பார்வையிடுவதற்கு 800 இலவச அனுமதிச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் தெரிவித்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அமைச்சருக்கான சிறப்பு பகுதியில் அமர்வதற்கு விசேட அனுமதிச்சீட்டுகளை மாத்திரம் விளையாட்டுத்துறை அமைச்சரிற்கு வழங்கினோம்  என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.