உலகில் சமீபத்தில் அறிமுகமாகி அனைவரையும் ஈர்த்துள்ள மொபைல் தொலைபேசிச் சாதனமான Huawei nova3 series கடந்த வாரம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் திகதியன்று தனது முதலாவது விற்பனை தினத்தை நிறுவனம் ஏற்பாடுசெய்திருந்தது. 

முதலாவது விற்பனை தினமானது நாடெங்கிலும் மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், Huawei nova3 மற்றும் nova3i ஆர்வலர்கள் அனைவருக்கும் பல சலுகைகளும் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் அடங்கியிருந்தன. முதலாவது விற்பனை தினம் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு இடங்களுக்கும் நேரடியாகச் சென்று அங்கு குழுமியிருந்தவர்களுடன் நேரடியாக அளவளாவிய நட்சத்திர விருந்தினரான ரெயினி சாருகாவை சந்திக்கும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெற்றது. 

இலங்கை மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட உற்சாகத்தை உறுதிப்படுத்தும் வகையில் விற்பனை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தினுள் சாதனையைப்படைக்க நிறுவனத்தால் முடிந்துள்ளது.

 இலங்கையில் இந்த வர்த்தகநாமம் அறிமுகமாக்கப்பட்ட பின்னர் படைத்த சாதனையாதெனில் ஆகஸ்ட் 11 ஆம் திகதி முடிவடையும் போது 2,000 தொலைபேசி சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு nova3 series மொத்த விற்பனையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலக்கினை எட்டியுள்ளது.

Huawei Device நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு, இச்சாதனை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் 

“சந்தையில் Huawei அறிமுகப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் மற்றும் நவநாகரீக அம்சங்களை இலங்கை மக்கள் எப்போதும் உள்வாங்கி வந்துள்ளனர். 

நான்கு AI  (செயற்கை நுண்ணுணர்வு) கேமராக்கள், அதிசிறந்த பெறுபேற்றுத்திறன் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள nova 3 series இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தையும் ,கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

நான்கு AI கேமரா முறைமையே nova3 Series இன் சிறப்பம்சமாகும். சமூக ஊடகத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துச் செல்லும் நிலையில், நாம் அன்றாடம் வசப்படுத்தும் புகைப்படங்களின் தரம் மற்றும் தனித்துவம் என்பன எமது வாழ்வில் அக்கறை மிக்க ஒரு விடயமாக மாறியுள்ளன.

nova3 Series ஆனது அந்த அக்கறையைப் போக்கும் வகையில் அதிசிறந்த புகைப்பட ஆற்றல்களை வழங்கும் நவீன நான்கு AI கேமரா முறைமையைக் கொண்டுள்ளது. nova3 Series இன் தனித்துவமான இரட்டை முன்புற கேமரா அமைப்பிலுள்ள AI தொழில்நுட்பமானது பாவனையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, வியக்கவைக்கும் புகைப்படங்களை வசப்படுத்த அவர்களுக்கு இடமளிக்கின்றது. 

AI Selfie Scenery Recognition போன்ற உட்கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடனான 24MP பிரதான கேமராவை உள்ளடக்கிய இரட்டை கேமரா அமைப்பின் மூலமாக அதிசிறந்த செல்ஃபி அனுபவத்தை nova3 Series வழங்குகின்றது. 

ஒருவரின் சூழலை தனித்துவமாக வேறுபடுத்தி,பின்புல காட்சிகளை உச்சமயப்படுத்தி, புகைப்படத்தில் இடம்பெறுபவர் மற்றும் பின்புலம் ஆகிய இரண்டுமே பிரமிக்க வைக்கும் வகையில் முழுமையாக மேம்பட்ட ஒரு செல்ஃபியாக அமைவதை உறுதிப்படுத்தும் ஆற்றலை மேற்குறிப்பிட்ட தொழில்நுட்ப சிறப்பம்சம் அதற்கு வழங்குகின்றது.

செல்ஃபி அனுபவத்தை முற்றிலும் புதியதொரு மட்டத்திற்கு எடுத்தும் செல்லும் வகையில் AI Beauty Algorithm, AI HDR Pro, Light Fusion technology மற்றும் 3 D Portrait Lighting உள்ளிட்ட ஏனைய பல தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும்  nova3 Series கொண்டுள்ளது.  

அதன் AI தொழில்நுட்பமானது தனித்துவமான 3D Qmoji mimics தொடர்பில் பயனாளர்களின் முகபாவங்கள் மற்றும் தத்ரூபமாக்கப்பட்ட பிரதிபலிப்புகள், விநோதமான வீடியோக்கள் (animated videos) ஆகியவற்றை மிக இலகுவாக ஒரு தடவை கிளிக் செய்வதன் மூலமாக

நண்பர்களுடன் பகிர்வு செய்ய முடியும். பாவனையாளர்கள் தமது அன்றாட நினைவுகளை வசப்படுத்தி,தமது ஆளுமையைப் பிரதிபலிக்கும் வழியில் அவற்றை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு இது மிகவும் முக்கியமாகும்.

nova3 Series இனுள் உட்பொதிந்துள்ள AI algorithm ஆனது 100 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்களை ஆய்வு செய்துள்ளதுடன், வேறுபட்ட சூழ்நிலைகளை இனங்கண்டு,  மேம்படுத்தும் ஆற்றலை அதற்கு வழங்குகின்றது. nova3 Series இன் பின்புறம் 22 பிரிவுகளில் 500 இற்கும் மேற்பட்ட சூழ்நிலைகளை இனங்காணும் ஆற்றலைக் கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு தனித்துவமான சூழ்நிலைக்கும் ஏற்ற வகையில் கேமராவின் சரிப்படுத்தல் மற்றும் சீராக்கல்களை தன்னியக்கமயப்படுத்துகின்றது. 

இதனுடன் இணைந்த வலிமையான பின்புற கேமராக்கள் பாவனையாளர்கள் எந்நேரமும் தத்ரூபமான புகைப்படங்களை வசப்படுத்த இடமளிக்கின்றது. nova3 ஆனது 24+16MP இரட்டை கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளதுடன், nova3i ஆனது 24MP  பிரதான கேமராவையும், 2MP துணைக் கேமராவையும் கொண்டுள்ளது. தோற்றத்தைப் பொறுத்த வரையில்,Huawei nova3 ஆனது நவநாகரிகமும், கவர்ச்சியும் மிக்கது. இச்சாதனம் 6.3” முழுமையான தோற்ற முகத்திரையைக் கொண்டுள்ளதுடன், உயர்ந்த அளவில் screen-to-body விகிதத்தையும் கொண்டுள்ளது. 

அதன் நான்கு மூலைகளும் உடலின் மேற்பாகத்துடன் கச்சிதமாகப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. இந்த உற்பத்தி வரிசையானது பல்வேறு கவர்ச்சியான நிறங்களில் வெளிவந்துள்ளது. 

அவற்றுள் Iris Purple என்ற நிறம் தனித்துவமானது.  நீல நிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு மென்மையான மாற்றங்களுக்கு உள்ளாகுவது போல சாய்வுடனான தோற்றமளிக்கும் “Iris Purple” என்ற நவீன பாணியிலான, தனித்துவமான வர்ணத்தில் கிடைக்கப்பெறுகின்றன. 

சாதனம் கிடையாக வைக்கப்பட்டுள்ள போது சாய்வானது மெதுவாக கருமையான நிறத்திற்கு மாற்றமடைகின்றது. ஆனால் நீங்கள் தாழ்வான கோணத்திலிருந்து அதனைப் பார்க்கும் போது மாயமான முறையில் அதன் நிறம் பிரகாசமடைகின்றது. இந்த சாய்வு நிறமானது புதுமையானதும், மாயமானதுமாகும் என்பதால் இளம் வயதினருக்கு மிகவும் உகந்தவை. Huawei  இன் ஸ்மார்ட்போன் உற்பத்தி வரிசையில் சிறப்பம்சமாக இவை கருதப்படுவதுடன், Huawei nova3 மற்றும் nova3i ஆகிய இரண்டிலும் கிடைக்கப்பெறுகின்றது. 

குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் Huawei நிற தொலைபேசி சாதனத்திற்கு அதிக கேள்வி நிலவுவதை Huawei அணி ஏற்கனவே அவதானித்துள்ளது.

Huawei nova3 இன் தோற்றமானது சந்தையில் ஏனைய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் அதன் தனித்துவத்தை மெய்ப்பிப்பதுடன் ஒரு வன்பொருள் வலுமிக்க சாதனமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதான Kirin processor இனைக் கொண்டுள்ள Huawei nova3 வியப்பூட்டும் பெறுபேற்றுத்திறனைக் கொண்டுள்ளது மட்டுமன்றி, 128GB ROM என்ற பாரிய memory கொள்ளளவின் பக்கபலமானது பாரிய எண்ணிக்கையில் வீடியோக்கள், பாடல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை அவ்வப்போது memory  இடத்தை பழையவற்றை அகற்றி அதன் பின்னர் புதியவற்றைப் பேண வேண்டிய சிரமங்களின்றி அவற்றைப் பேணும் ஆற்றலையும் பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.

அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில தினங்களுக்குள்ளாகவே Huawei nova3 series இலங்கை மக்களின் இதயங்களை வென்றுள்ளது. அதன் அதிசிறந்த பாவனையாளர் அனுபவம், நவநாகரிக வடிவமைப்பு மற்றும் சிறந்த விலையில் அதிசிறந்த பெறுபேற்றுத்திறன் ஆகியன அதற்கு பலத்த கேள்வி நிலவுவதை உறுதி செய்துள்ளதுடன், அனைவரும் அதனை நிச்சயமாக அனுபவித்து பார்க்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு பெறுமதி மிக்கதொரு ஸ்மார்ட்போனாகும்.