மாதம்பே, குளியாப்பிட்டிய வீதியின் வெலவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்று பாதசாரதி மீது மோதியமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் 31 வயதையுடை மோட்டார் சைக்கிளின் சாரதியும் 73 வயதையுடைய பெண் பாதசாரதி ஒருவருமே உயிரிழந்துள்ளதுடன் இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.