கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க மகாண சபைக்கு யோசனை முன்வைத்துள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாகலகம் வீதி, பொது வர்த்தக கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கொழும்பு மாநகர சபைக்குள் ஒருபோதும் காணாத அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டமையும் குறிப்பிடத்தக்கது.