ஜா-எல பகுதியில் வங்கியில் பணத்தை வைப்பிலிடச் சென்ற நபரை கத்தியால் குத்திவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணத்தை வைப்பிலிடச்சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொள்ளையர் கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.