குறைவான சக்திவலு பயன்பாட்டுடனான சீனாவின் ரயில் பாதை விஸ்தரிப்பு தெற்கில் : 26 கி.மீ வரை பூர்த்தி!!!

Published By: Digital Desk 7

17 Aug, 2018 | 01:08 PM
image

(நா.தனுஜா)

சீனாவால் தெற்கில் முன்னெடுக்கப்படும் பாரிய ரயில் பாதை விஸ்தரிப்பு பணிகள் தொடர்வதாகவும், 26 கிலோமீற்றர் வரையான வேலைத்திட்டம் பூர்த்தியடைந்துள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஊடகவியலாளர்களுக்குக் காண்பிக்கும் வகையில் இலங்கையிலுள்ள சீன தூதரகத்தினால் நேற்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போதே சீன அதிகாரிகளால் மேற்கண்ட விடயம் குறித்துத் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

"தெற்கில் மாத்தறை மற்றும் பெலியத்த போக்குவரத்து மார்க்கத்திலான ரயில்  தண்டவாள நிர்மாணப்பணி சீனா தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் 26 கிலோமீற்றர் வரையான நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. அத்தோடு ஒரு கீலோமீற்றர் நீளமான மேம்பாலத்தையும் சீனாவின் ரயில் பாதை விஸ்தரிப்புத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. இதுவே இலங்கையிலுள்ள மிக நீளமான ரயில் பாதை மேம்பாலமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ரயில் பாதை மிதமான சாய்வு மற்றும் வளைவுகளை உள்ளடக்கியுள்ளது. இதன்மூலம் ரயில்  பயணிப்பதற்கு குறைவான சக்திவலு போதுமானது என்பதுடன், மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்திலும் பயணிக்க முடியும். மேலும் பயணிகளுக்கான நவீன வசதிகளோடு, தொலைத்தொடர்பு வசதிகளும் உரிய வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான மத்திய போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டு மையம், மாத்தறை மற்றும் பிலதுவ ரயில் பாதை புனரமைப்பு, போக்குவரத்துப் பாதையின் முறையான பராமரிப்பு, தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் நவீனமயப்படுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டு முறை என்பன சீனாவால் முன்னெடுக்கப்பட்டு வரும் போக்குவரத்துப்பாதை விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39