சீன, ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் புதிய தடை

Published By: Vishnu

17 Aug, 2018 | 12:53 PM
image

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விதித்த பொருளாதார தடைகளை மீறியமைக்காக சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த காலங்களில் வடகொரியாவானது உலக நாடுகளின் எதிர்ப்புக்களைத் தாண்டியும் ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளுக்கு மத்தியிலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நடவடிக்கை காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வடகொரியா மீது பலத்த பொருளாதார தடைகளை விதித்தது. இந் நிலையில் ஐ.நா.பாதுகாப்பு சபையின் இந்த தடைகளை மீறி சீனாவும், ரஷ்யாவும் வடகொரியாவுடன் நட்புறவை பலப்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளமை தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் பிராபினட் பீட்டி நிறுவனத்தை அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடைகளை விதிக்க நடவடிக்க‍ை எடுத்துள்ளது.

மேலும் சீனாவின் டாலியன் சன் மூன்ஸ்டார் இன்டர்நெஷனல் லாஜிஸ்டிக்க்ல் டிரேடிங் கம்பெனி, அதன் சிங்கப்பூர் கிளை நிறுனம் மீதும் அமெரிக்க பொருளாதார தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47