ஹட்டன் - கொழும்பு வீதி போக்குவரத்து இரண்டு மணித்தியாலயத்தின் பின்னர்  வழமைக்கு திரும்பியதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 

தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. செனன் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில்  மண்சரிவு  ஏற்பட்ட நிலையில் ஹட்டன் - கொழும்பு மற்றும் கண்டி பகுதிகளுக்கான போக்குவரத்து இரண்டு  மணித்தியாலங்கள் வரை தடைப்பட்டிருந்த நிலையில் நோட்டன் தியகல வழியாக பாதையை பயன்படுத்தினர்.

ஹட்டன்  பொலிஸாரும் ஹட்டன் நகரசபையினரும் வீதி அபிவிருத்தி ஊழியர்களும் இணைந்து மண்சரிவை அகற்றியபின்னர் 11.30 மணிமுதல் மீண்டும் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.